CINEMA
“இந்த கேவலமான விஷயத்துக்கு தான் ரகுமான் Choose பண்ணேன்”.. உண்மையை உடைத்து பேசிய பார்த்திபன்
“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானை தேர்ந்தெடுத்தது குறித்தான காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார் பார்த்திபன்.
எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கும் பார்த்திபன் தற்போது “இரவின் நிழல்” என்ற உலக சாதனை படைத்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். அதாவது இத்திரைப்படம் உலகின் முதல் Non Linear Single Shot திரைப்படமாக உருவாகி உள்ளது.
இதனை கேள்விப்பட்ட திரையுலகினர் அதிர்ச்சியில் மூழ்கினர். மேலும் பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ ஆர் ரகுமானிடன் பேசும் போது “அனைவரும் எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்தாய் என கேட்டனர். அவர்களிடம் ரகுமான் இருக்கும் நம்பிக்கையில் தான் என பதில் அளித்தேன்” என்று பார்த்திபன் கூறினார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டி அளித்த பார்த்திபன், தான் ஏ ஆர் ரகுமானை இசை அமைக்க கேட்டுக் கொண்டதற்கான உண்மை காரணத்தை உடைத்து கூறியுள்ளார்.
அப்பேட்டியில் பார்த்திபன் “ஏ ஆர் ரகுமானை வைத்து என் படத்திற்கு எப்படியாவது விளம்பரம் செய்துவிடலாம் என்ற கேவலமான விஷயத்திற்கு தான் அவரை என் திரைப்படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டு கொண்டேன். ஆனால் படத்திற்கு அவர் இசையமைக்க தொடங்கியதில் இருந்து அவரின் ஈடுபாடு தீவிரமாக இருந்தது. அவரின் உழைப்பு பார்த்து அசந்துவிட்டேன்” என நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
“இரவின் நிழல்” திரைப்படத்தை பார்த்திபன் தான் இயக்கி நடித்தும் உள்ளார். இத்திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.