CINEMA
“லிங்குசாமி மட்டும் பொண்ணா பொறந்திருந்தா???”… பார்த்திபன் கலகல பேச்சு..
இயக்குனர் லிங்குசாமி குறித்து ஒரு விழாவில் பார்த்திபன் கலகலப்பாக பேசியுள்ளது வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் லிங்குசாமி “ரன்”, “சண்டக்கோழி”, “பையா’, “வேட்டை” என பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய “அஞ்சான்” திரைப்படம் சரியாக போகவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் “தி வாரியர்” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
“தி வாரியர்” திரைப்படத்தில் இடம்பெற்ற “புல்லட்” பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி உள்ளது. இப்பாடலில் கீரீத்தி ஷெட்டி ஆடிய கவர்ச்சி நடனம் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தது.
இந்நிலையில் “தி வாரியார்” திரைப்படத்தின் Pre Release Event நேற்று நடைபெற்றது. இதில் ராம் பொத்தினேனி, கிரீத்தி ஷெட்டி, லிங்குசாமி, பார்த்திபன், பாரதி ராஜா, விஷால் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பேசிய பார்த்திபன் “லிங்குசாமி பெண்ணாக இருந்தால் நான் வச்சிக்குவேன் என பாரதி ராஜா கூறினார். ஆனால் என்னுடைய கவலை எல்லாம் லிங்குசாமி ஒரு பெண்ணாக இருந்தால் எத்தனை ஆண்களை வச்சிட்டு இருப்பார் என்பதே” என்று கலகலப்பாக கூறியது தற்போது வைரல் ஆகி வருகிறது.
“தி வாரியர்” திரைப்படம் வருகிற 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் கதாநாயகியான கிரீத்தி ஷெட்டி தற்போது தமிழில் பாலா சூர்யாவை வைத்து இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் கதாநாயகன் ராம் பொத்தினேனி தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர். எனினும் தமிழுக்கு “தி வாரியர்” திரைப்படம் மூலமாக ராம் என்ற பெயருடன் அறிமுகம் ஆகிறார்
