Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஓடிடியில் வெளிவரும் ரஞ்சித் படம்?

CINEMA

ஓடிடியில் வெளிவரும் ரஞ்சித் படம்?

நீலம் புரொடகஷன்ஸ் சார்பாக பா. ரஞ்சித் வெளியிடும் திரைப்படம் குறித்தான முக்கிய தகவலை பார்க்கலாம்.

இயக்குனர் பா. ரஞ்சித் தமிழின் மிக முக்கியமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவரது திரைப்படங்களில் சமூக நீதி சார்ந்த சிந்தனைகள் இழையோடி இருக்கும். இவர் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படம் திரையுலகையே “ஆ” வென பார்க்க வைத்தது.

தன் தரப்பு அரசியலை ஒரு சுவரை குறியீடாக வைத்து அவர் திரைக்கதையில் ஆடிய ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின் இவருக்கு ஏறுமுகம் தான். ரஜினியை வைத்து இயக்கிய “கபாலி”, “காலா” ஆகிய திரைப்படங்கள் ரஜினிக்கு உரிய மாஸோடு தன் தரப்பு அரசியலையும் சேர்த்து எழுதிய திரைக்கதை வெகுவாக ரசிகர்களை ஈர்த்தது.

மேலும் இத்திரைப்படங்கள் பெரும் அரசியல் சர்ச்சையை உண்டு செய்தது. இதனை தொடர்ந்து “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தை இயக்கினார். அமேசான் பிரைமில் ரிலீஸான இத்திரைப்படம் வேற லெவல் ஹிட்டானது. தற்போது பா. ரஞ்சித் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பா. ரஞ்சித், தனது அடுத்த திரைப்படமான “வேட்டுவம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடுகிறார். இந்நிலையில் பா. ரஞ்சித் தயாரித்த “சேத்துமான்” திரைப்படம் வருகிற மே 27 ஆம் தேதி “சோனி லைவ்” ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது.

இத்திரைப்படம் ஏற்கனவே கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் வெளிவந்தது. ஆதரவில்லா சிறுவனை வளர்க்கும் முதியவர் ஒருவர் ஒரு பண்ணையாரிடம் வேலை பார்க்கிறார். அந்த பண்ணையாருக்கு திடீரென பன்றி இறைச்சி சாப்பிட வேண்டும் என தோன்றுகிறது. அம்முதியவரிடம் பன்றியை கொன்று வந்து சமைத்து தரும்படி கட்டளையிடுகிறார். இச்சம்பவத்தை பின்னி பல சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பூசல்களையும் திரைப்படம் பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் பெருமான் முருகன் எழுதிய “வருகறி” என்ற நாவலை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். இத்திரைப்படத்தை தமிழ் இயக்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top