CINEMA
“எங்களை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க..” விமானத்தில் சொயிங்க் என பறந்த நயன்-விக்கி..
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் திடீரென வேறு ஒரு நாட்டிற்கு தப்பி ஓடியுள்ளனர். ஏன் தெரியுமா?
நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிரூத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமண வைபவ வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது. சமீப நாட்களாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் நயன்தாராவை கைவிட்டு விட்டது எனவும், நெட்ஃப்ளிக்ஸில் நயன்-விக்கி திருமணம் வெளிவருவதில் சிக்கல் இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து நயன்-விக்கி திருமண வைபவம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெப் சீரீஸ் போல் சீசன்களாக வெளிவர உள்ளதாக அறிவிப்பு வந்தது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷி ஆகினர்.
இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஹனி மூனுக்கு கிளம்பினர். அங்கே பல ரொமான்ட்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். அதன் பின் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவரவர்களின் பணியில் பிசியானார்கள். தற்போது இருவரும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க முடிவு செய்து வேறு நாட்டிற்கு பறந்துள்ளனர்.
அதாவது ஸ்பெயின் நாட்டிற்கு தற்போது இருவரும் ஜோடியாக பறந்துள்ளனர். விமானத்தில் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “தொடர்ந்து பல வேலைகளுக்கு பின் இருவரும் எங்களுக்கான நேரத்தை செலவிட புறப்பட்டுவிட்டோம்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram