Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பேருந்தில் எளிமையாக பயணம் செய்த நயன்தாரா… அடடா!!

CINEMA

பேருந்தில் எளிமையாக பயணம் செய்த நயன்தாரா… அடடா!!

ஸ்பெயின் நாட்டில் காதல் புறாக்களாக ஜோடி சேர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர்.

நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிரூத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வைபவ வீடியோ விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.

இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஹனி மூனுக்கு கிளம்பினர். அங்கே பல ரொமான்ட்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். அதன் பின் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவரவர்களின் பணியில் பிசியானார்கள். தற்போது இருவரும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க முடிவு செய்து வேறு நாட்டிற்கு பறந்துள்ளனர்.

அதாவது ஸ்பெயின் நாட்டிற்கு தற்போது இருவரும் ஜோடியாக பறந்துள்ளனர். விமானத்தில் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அதில் “தொடர்ந்து பல வேலைகளுக்கு பின் இருவரும் எங்களுக்கான நேரத்தை செலவிட புறப்பட்டுவிட்டோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டின் பெர்சிலோனாவில் இருவரும் காதல் ஜோடிகளாக உல்லாசமாக திரியும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் மொட்டை மாடி பஸ்ஸில் குளு குளு என காற்று வாங்கிக்கொண்டு பயணம் செய்கிறார்கள் நயன்-விக்கி தம்பதியினர்.

இதில் இருந்து இருவரும் தங்களுடைய வெளிநாட்டுப் பயணத்தை என்ஜாய் செய்துகொண்டிருப்பதாக தெரிகிறது. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Continue Reading

More in CINEMA

To Top