CINEMA
திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நயன்தாரா செய்த நற்காரியம்? புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு ஆதரவில்லா குழந்தைகளுக்கு செய்த உதவியை பாருங்க..
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபலிபுரம் ரிசார்ட்டில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் ரஜினிகாந்த், ஐசரி கணேஷ், மோகன் ராஜா, விஜய் சேதுபதி, ஷாருக் கான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தனது திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் திருமண விருந்து வழங்கப்பட தம்பதியினர் ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் 18,000 ஆதரவில்லா குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதியோர் இல்லங்கள், ஆதரவில்லாதோர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் திருமண விருந்து வழங்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நற்செயலை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுக்கு 200 பேர்கள் வரை மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் செல்ஃபோன்களை உள்ளே எடுத்துச் செல்ல கூடாது என தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இத்திருமண விழாவின் வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திருமண நிகழ்வை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.
இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று இருவருக்கும் மகாபலிபுரம் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.
