CINEMA
நயன்தாரா கல்யாண வைபோகமே; Special புகைப்படங்கள்…
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் இன்று மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் ரிசார்ட்டில் வைத்து இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
திருமண நிகழ்வின் கண்களை கவரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிகப்பு ஆடையில் பிரம்மிக்கும் அழகுடன் நயன்தாரா மணப்பெண்ணாக தென்படுகிறார்.
இந்து சமய முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டுகிறார். அதன் பின் நயன்தாராவிற்கு முத்தம் இடுகிறார்.
மாலையை மாற்றும் போது சிறு குறும்பு விளையாட்டையும் விளையாடுகிறார் நயன்தாரா.
இருவரின் முகங்கள் கல்யாண குஷியில் பார்க்கவே ஊரார் கண் படும் வகையில் அமைந்திருக்கிறது. கல்யாண நிகழ்வின் Happiest moment-களாக இப்புகைப்படங்கள் பதிவாகி இருக்கின்றன.
இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
From Nayan mam … to Kadambari … to #Thangamey …. to my baby ….. and then my Uyir … and also my Kanmani ….. and now … MY WIFE 😇☺️😍😘❤️🥰🥰😘❤️😇😇😍😍 #WikkiNayanWedding #WikkiNayan pic.twitter.com/5J3QT71ibh
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
இத்திருமண விழாவில் ரஜினிகாந்த், ஐசரி கணேஷ், மோகன் ராஜா, விஜய் சேதுபதி, ஷாருக் கான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபலிபுரம் ரிசார்ட்டில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் ரஜினிகாந்த், ஐசரி கணேஷ், மோகன் ராஜா, விஜய் சேதுபதி, ஷாருக் கான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இத்திருமண விழாவின் வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திருமண நிகழ்வை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர். இந்நிலையில் இன்று இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றுள்ளது.