Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நயன்தாராவின் உதட்டில் லிப் லாக் முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. வைரல் புகைப்படங்கள்

CINEMA

நயன்தாராவின் உதட்டில் லிப் லாக் முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. வைரல் புகைப்படங்கள்

நயன்தாராவிற்கு லிப் லாக் கொடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வைபவ வீடியோ விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.

இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஹனி மூனுக்கு கிளம்பினர். அங்கே பல ரொமான்ட்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். அதன் பின் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவரவர்களின் பணியில் பிசியானார்கள். தற்போது இருவரும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க முடிவு செய்து வேறு நாட்டிற்கு பறந்துள்ளனர்.

அதாவது ஸ்பெயின் நாட்டிற்கு தற்போது இருவரும் ஜோடியாக பறந்துள்ளனர். விமானத்தில் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் “தொடர்ந்து பல வேலைகளுக்கு பின் இருவரும் எங்களுக்கான நேரத்தை செலவிட புறப்பட்டுவிட்டோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டின் பெர்சிலோனாவில் இருவரும் காதல் ஜோடிகளாக உல்லாசமாக திரியும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். பெர்சிலோனாவின் தெருக்களில் இருவரும் ஜோடியாக திரியும் பல புகைப்படங்கள் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

இந்த நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொள்ளும் ஒரு சுவர் ஓவியத்திற்கு முன் நின்றுகொண்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தூரத்தில் இருந்தே முத்தம் கொடுத்துகொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top