Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

திக் திக் “நயன்தாரா”,, விறுவிறுப்பான O2 டீசர்..

CINEMA

திக் திக் “நயன்தாரா”,, விறுவிறுப்பான O2 டீசர்..

நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் O2 திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிகை மட்டும் அல்லாது தற்போது அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. அவர் தயாரித்த “கூழாங்கல்” திரைப்படம் ஆஸ்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளிவந்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் இளைஞர்களின் மனதை கவர்ந்தது.

இதனை தொடர்ந்து நயன்தாரா சமீபத்தில் தோனியை சந்தித்தது வைரலானது. தோனி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கப் போகிறார் எனவும் அதில் நயன்தாரா தான் கதாநாயகியாக நடிக்க போகிறார் எனவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் நயன்தாரா  நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான “O2” திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. நடு இரவில் ஒரு பேருந்து காணாமல் போனதை போலீஸார் தேடுகின்றனர். திடீரென்று ஒரு புதை குழியில் இருந்து வெளிவரும் குழாயில் “காப்பாத்துங்க” என்று சத்தம் கேக்கிறது. அப்படியே அந்த குழாய் வழியாக கேமரா போக , ஒரு பேருந்தில் நயன்தாரா உட்பட பலரும் சிக்கியிருக்கின்றனர்.

“நாம் எல்லாம் பதட்டப்படாம சண்ட போடாம கொஞ்சம் அமைதியா இருந்தா இன்னும் 12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்” என நயன்தாரா அங்குள்ளவர்களை பார்த்து கூறுகிறார்.

இந்த காட்சிகளை பார்க்கும் போது ஒட்டு மொத்த திரைப்படமும் ஒரே பேருந்தில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் ஒரு பேருந்து மண் சரிவில் மாட்டி மணலுக்குள் புதைந்து அங்குள்ளவர்கள் ஆக்சிஜனுக்காக போராடும் கதையம்சம் அமைந்த திரைப்படம் போலும் தெரிகிறது. திரைப்படத்தின் பெயரே O2 என இருப்பதால் கதையம்சமும் ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட விஷயமாக தான் இருக்கும் என தெரியவருகிறது.

இத்திரைப்படத்தை ஜி. எஸ். விக்னேஷ் இயக்கியுள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

                           

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top