CINEMA
வெப் சீரீஸாக வெளிவருகிறது நயன்-விக்கி திருமணம்; எத்தனை சீசன் தெரியுமா?
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் வெப் சீரீஸ் போல் பல சீசன்களாக வெளிவர உள்ளது.
நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிரூத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமண வைபவ வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது. சமீப நாட்களாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் நயன்தாராவை கைவிட்டு விட்டது எனவும், நெட்ஃப்ளிக்ஸில் நயன்-விக்கி திருமணம் வெளிவருவதில் சிக்கல் இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது நயன்-விக்கி திருமண வீடியோ குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இவர்களின் திருமண வைபவம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளதாம்.
அதை விட சுவாரசியமான தகவல் என்னவென்றால். நயன்-விக்கி திருமண நிகழ்வு வெப் சீரீஸ் போல் பல சீசன்களாக வெளிவருகிறதாம். இதில் முதல் சீசன் விரைவில் வெளிவருகிறதாம்.
மேலும் இதில் நயன்தாராவின் சினிமா பயணம் குறித்த தொகுப்புகளும் இடம்பெறுகின்றனவாம். இவ்வாறு செய்திகள் தெரிவிக்கின்றன.
பல நாட்களாக நயன்-விக்கி திருமண வைபவத்தின் வீடியோ வெளிவராது என பலரும் எண்ணி வந்தனர். ஆனால் ரசிகர்கள் எல்லாம் குஷியாகும் விதத்தில் தற்போது நயன்-விக்கி திருமணம் பல சீசன்களாக வெளிவருவதாகவும் மேலும் அதில் நயன்தாராவின் சினிமா பயணம் குறித்த தொகுப்புகளும் வெளிவருவதாகவும் செய்தி வெளியாகியது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நயன்தாரா தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விக்னேஷ் சிவன் அஜித் குமாரை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
