Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“பம்மாத்து படங்களுக்கு நடுவே சிறந்த படம்”.. மனம் திறந்து பாராட்டிய மிஷ்கின்

CINEMA

“பம்மாத்து படங்களுக்கு நடுவே சிறந்த படம்”.. மனம் திறந்து பாராட்டிய மிஷ்கின்

“மாமனிதன்” திரைப்படத்தை பார்த்த மிஷ்கின் மனம் திறந்து இயக்குனரை பாராட்டியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மாமனிதன்”. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம், கே பி ஏ சி லலிதா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

தேனிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டி வரும் விஜய் சேதுபதி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக வசித்து வருகிறார். ஆனால் தனது குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்.

அவ்வேளையில்  அந்த கிராமத்திற்கு ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் வருகிறார். அந்த புரோக்கரை பயன்படுத்தி விஜய் சேதுபதியும் ஒரு புரோக்கர் ஆகிறார். இந்த நிலையில் தன்னுடைய குழந்தைகளை தான் நினைத்தது போல் படிக்க வைத்தாரா இல்லையா? ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆன விஜய் சேதுபதி மாமனிதர் ஆனாரா? என்பதே இத்திரைப்படத்தின் கதை.

“மாமனிதன்” திரைப்படத்திற்கு இதுவரை பாஸிட்ரிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் உள்ளன. குடும்பம் குடும்பமாக சென்று “மாமனிதன்” திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

படம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் “மாமனிதன்” திரைப்படத்தை கண்டுள்ளார். அதனை தொடர்ந்து “மசாலா படங்களுக்கும் பம்மாத்து படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதில் இருந்து நன்றி” என இயக்குனரை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் “மாமனிதன்” திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட குழுவினரை பாராட்டிய நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கின் மனதார பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top