CINEMA
மிஷ்கின் – சிவகார்த்திகேயன் கூட்டணி…? வியக்க வைக்கும் தகவல்
மிஷ்கின் – சிவகார்த்திகேயன் ஆகியோர் புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் 100 கோடிக்கும் மேல் அள்ளிக் கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் கே. வி. இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து ‘SK21” திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். மேலும் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இணைகிறார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் “SK 22” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் மிஷ்கின் இணையவுள்ளதாக சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது மிஷ்கின் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.
மிஷ்கின் ஒரு சிறந்த இயக்குனராக இருந்தாலும், “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” என்ற திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகராகவும் அறியப்பட்டார். அதன் பின் அவர் வில்லனாக நடித்த “சவரக்கத்தி” திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. மேலும் அத்திரைப்படத்தில் வில்லன் ரோலில் அசத்தி எடுத்திருப்பார்.
இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் “SK 22” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிஷ்கின் தற்போது “பிசாசு 2” ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.
மேலும் மிஷ்கின் “டெவில்” என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர் “எனது தம்பி அவரது படத்திற்கு இசையமைக்க என்னிடம் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். நான் கடந்த ஒன்றரை வருடங்களாக வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என கூறினார்.
மேலும் “SK 22” திரைப்படத்தில் கெயிரா அத்வானி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.