Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம்..?

CINEMA

இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம்..?

இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

இசையமைப்பாளர் இமான் தனது 18 வயதிலேயே தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் வெளிவரவில்லை. ஆனால் அதன் பின் விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்திற்கு இசையமைத்தார். அதுவே இவரது முதல் படமாக அறியப்படுகிறது.

தமிழன் திரைப்படத்தின் பாடல்களை 90’s kids-கள் மறந்திருக்க முடியாது. எல்லா பாடல்களுமே பக்கா ஹிட். அதுவும் விஜய்யும் பிரியங்கா சோப்ராவும் தன் சொந்த குரலில் பாடிய “உள்ளத்தை கிள்ளாதே” பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

அதன் பின் பல திரைப்படங்கள், பல ஹிட் பாடல்கள் என சென்ற அவரது கேரியரில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் “மைனா”. “மைனா” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மனதை லேசாக ஆக்க கூடியவை. அத்திரைப்படத்திற்கு பிறகே அவரது மார்க்கெட் வேற லெவலில் எகிறியது. அதன் பின் அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான் என ஆனது. “விஸ்வாஸம்” திரைபடத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” என்ற பாடல் இமானுக்கு ட்ஹேசிய விருதை பெற்றத் தந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து “அண்ணாத்த” திரைப்படம் மூலம் ரஜினி திரைப்படத்திற்கு இசையமக்கும் வாய்ப்பு அமைந்தது. தமிழின் பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு எப்படியாவது ரஜினி நடித்த ஒரு  திரைப்படத்திற்காகவாவது இசையமைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அது “அண்ணாத்த” திரைப்படம் மூலம் இமானுக்கு அமைந்தது.

இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சார்ட்ஸ் என்பவரை இசையமைப்பாளர் இமான் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியடுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து இமான் விரைவில் மறுமணம் புரிய போவாதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டி. இமான் மணப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top