CINEMA
அனிரூத்தை பாராட்டிய பாகுபலி இசையமைப்பாளர்.. வைரல் டிவீட்
பாகுபலி இசையமைப்பாளர் அனிரூத்தை பாராட்டிய டிவீட் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“மகதீரா”, “நான் ஈ”, “பாகுபலி”, “ஆர் ஆர் ஆர்” போன்ற ராஜமௌலியின் மெகா ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் எம் எம் கீரவாணி. இவரை தமிழ் திரை உலகில் மரகதமணி என அழைப்பர்.
இவர் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக பாலச்சந்தர் இயக்கிய “அழகன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். “அழகன்” திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட். குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே”, “சங்கீத சுவரங்கள்”, “தத்தித்தோம்” ஆகிய பாடல்கள் இப்போதும் ரசிக்கும்படியாக இருக்கும். அதன் பின் தமிழில் “வானமே எல்லை’, “பிரதாப்” போன்ற பல ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ராஜமௌலியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிப்போனார். ராஜமௌலியின் முதல் திரைப்படமான “ஸ்டூடண்ட் நம்பர் ஒன்” திரைப்படத்தில் இருந்து தற்போது சமீபத்தில் வந்த “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வரை அனைத்து திரைப்படங்களுக்கும் கீரவாணி தான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் கீரவாணி, சிவகார்த்திகேயன் நடித்த “டான்” திரைப்படத்தில் இடம்பெற்ற “Bae” பாடலை புகழ்ந்து தள்ளியுள்ளார். ஆம்!
“Bae” பாடலை குறித்து கீரவாணி தனது டிவிட்டர் பக்கத்தில் “டான் திரைப்படத்தில் இடம்பெற்ற bae பாடல் மிகவும் addictive ஆக உள்ளது. அனிரூத் எப்போதுமே புதுமையானவர்” என புகழ்ந்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனிரூத், “Love you sir” என கூறியுள்ளார். தற்போது இந்த டிவீட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
