CINEMA
“மர்வெல்க்கே டஃப் கொடுக்கும் மிர்ச்சி சிவா”… கலகலப்பான நியூ லுக்
மார்வெல் திரைப்படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படத்தின் கலகலப்பான ஃபர்ட் லுக் வெளியாகியுள்ளது.
மிர்ச்சி சிவாவின் படங்களில் கலகலப்புக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமே இருக்காது. சென்னை 28 திரைப்படத்திலேயே தன்னுடைய நடிப்பில் யதார்த்தமான நகைச்சுவை தொனியை வெளிப்படுத்தி மக்களை ரசிக்க வைத்தார். அதன் பிறகு மைல் கல்லாக அமைந்த படம் “தமிழ் படம்”.
தமிழின் முதல் ஸ்பூஃப் படமான ‘தமிழ் பட”த்திலே தன்னை “அகில உலக சூப்பர் ஸ்டார்”? என அறிவித்துக் கொண்டவர். இவரும் விமலும் சேர்ந்து கலக்கிய கலகலப்பு திரைப்படத்தை நம்மால் மறக்கமுடியாது. விமலும் சிவாவும் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.
அதன் பின்பு “தமிழ் படம் 2”-ல் பட்டையை கிளப்பிய அவர் சமீபத்தில் ராம்பாலா இயக்கத்தில் “இடியட்” என்ற திரைப்படத்தில் நடித்தார். ராம் பாலா இதற்கு முன் சந்தானத்தை வைத்து “தில்லுக்கு துட்டு” “தில்லுக்கு துட்டு 2” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். 90’s kids-களின் ஆல் டைம் ஃபேவரைட்டான லொள்ளு சபா நிகழ்ச்சியின் இயக்குனர் இவர்.
இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமைந்தது. அதுவும் சிவாவும் கிங்க்ஸ்லியின் இணைந்து பேயை கலாய்க்கும் காட்சிகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.
இந்நிலையில் விக்னேஷ் ஷா இயக்கி சிவா நடிக்கும் “Single ஷங்கரும் Smartphone சிம்ரனும்” என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
போஸ்டரின் மார்வல் திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களான ஹல்க் மற்றும் ஐயர்ன் மேன் ஆகியோர் பில்லா திரைப்படத்தில் வரும் அஜித் போல் சிவாவை பிடித்து வைத்திருக்கிருக்கிறார்கள். ஹல்க் தமிழ்நாடு ஸ்டைல் போல் லுங்கு கட்டியிருக்கிறார். படத்தின் போஸ்டரை பார்த்தால் ஒரு காமெடி விருந்து நமக்காக காத்திருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.