CINEMA
சிக்ஸ் பேக்ட்டில் சந்தீப் கிசான்… மிரட்டலாக வெளிவந்த மாஸ் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் சந்தீப் கிசான், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் “மைக்கேல்” திரைப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சந்தீப் கிசான் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர் ஆவார். தமிழில் “யாருடா மகேஷ்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த “மாநகரம்” திரைப்படத்தில் தான் பரவலாக அறியப்பட்டார்.
அதன் பின்னார் சி.வி. குமாரின் “மாயவன்” திரைப்படத்தில் நடித்தார். இதனிடையே ஹிந்தியில் வெற்றி நடை போட்ட “ஃபேமிலி மேன்” வெப் சீரீஸிலும் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு “புரியாத புதிர்” “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” போன்ற திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கும் “மைக்கேல்” திரைப்படத்தில் சந்தீப் கிசானும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பதாக தகவல் வந்தது.
அதனை தொடர்ந்து இன்று சந்தீப் கிசானின் பிறந்த தினத்தை ஒட்டி தற்போது இத்திரைப்படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சந்தீப் கிசான் சிகஸ் பேக்ட் உடன் கையில் துப்பாக்கியுடன் மாஸாக காட்சி தருகிறார். அவரை சுற்றி கத்திகளுடனும் துப்பாக்கிகளுடனும் அவரை தாக்க முற்படுகிறார்கள். முகத்தில் ஸ்டைலான தாடியுடன் சந்தீப் கிசான் ஆள் டெரராக இருக்கிறார்.
“மைக்கேல்” திரைப்படத்தில் திவ்யா கௌசிக் ஜோடியாக நடித்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் வரலக்ஷ்மி சரத்குமார், வருண் சந்தேஷ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரைப்படம் எப்போது வெளிவரும்? என்ற ஆவலை ரசிகர்களிடம் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.