CINEMA
நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி
நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் 2013 ஆம் ஆண்டு வாக்கில் மாடலிங் உலகில் காலடி எடுத்து வைத்தார். இதன் பின் “8 தோட்டாக்கள்” “தானா சேர்ந்த கூட்டம்” “போதை ஏறி புத்தி மாறி” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எனினும் “பிக் பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியின் மூலமாக தான் மீரா மிதுன் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விஜய், ரஜினி என பல நடிகர்கள் குறித்த பல சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனிடையே ஒரு முறை பட்டியலினத்தவர்களை பற்றி சர்ச்சையான கருத்தை முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து அவர் மீதும் அவரது நண்பர் ஷாம் மீதும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பிற கட்சிகளால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின் ஜாமினில் வெளியே வந்த அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் போலீஸார் மீண்டும் கைது செய்தனர். சில நாட்களில் மீண்டும் ஜாமினில் வெளியே வந்தார்.
கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் மீரா மிதுன் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றபோது மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாததால் இது நீதிமன்றத்தை ஏமாற்றும் முயற்சி என கூறிய நீதிபதி, மீரா மிதுன் ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
