CINEMA
மீனாவுக்கு இப்படி ஒரு பரிதாப நிலை ஏற்படனுமா? சோகத்தில் திரையுலகம்..
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தார் என்ற செய்தி திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை மீனா சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர். 1980-களில் வெளிவந்த “நெஞ்சங்கள்”, “எங்கேயோ கேட்ட குரல்”, “சுமங்கலி” “அன்புள்ள ரஜினிகாந்த்” என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
குறிப்பாக மீனா “அன்புள்ள ரஜினிகாந்த்” திரைப்படத்தில் “ரஜினி அங்கில்” என ரஜினியிடம் ஓடிவரும் காட்சி மிகவும் பிரபலமான காட்சியாகும். அதன் பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, தெலுங்கில் வெளிவந்த “நவயுகம்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின் தமிழில் ராஜ்கிரண் நடித்த “என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் அழகு பதுமையாக காட்சி தந்து பார்வையாளர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதனை தொடர்ந்து மீனாவுக்கு ஏறுமுகம் தான்.
தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், கார்த்திக், அர்ஜூன் என பலருடனும் ஜோடியாக நடித்த மீனா காலப்போக்கில் தமிழின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் கூட மலையாளத்தில் மோகன் லாலுடன் “திரிஷ்யம் 2”, “ப்ரோ டாடி” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதனிடையே மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை மணமுடித்தார். அவரது பெண் குழந்தையான நைனிகா விஜய்யுடன் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்தார். அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவரது நுரையீரல் பாதிப்படைந்திருந்ததாக தெரிய வருகிறது.
மீனாவுக்கு குஷ்பு, சரத்குமார் ஆகிய பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.