CINEMA
மணி ரத்னத்திற்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி
இயக்குனார் மணி ரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் குறித்தான விவாதங்கள் தற்போது எழுந்து வருகிறது. சோழர் வரலாற்றை குறித்து இணையத்தில் பலரும் கலந்துரையாடி வருகிறார்கள்.
சோழர் வரலாற்று குறித்த ஒரு ஜனரஞ்சகமான அறிமுகத்தை ஏற்படுத்தி உள்ளது “பொன்னியின் செல்வன்” திரைப்படம். மேலும் பலரும் “பொன்னியின் செல்வன்” நாவலை வாங்கி வாசித்து வருகிறார்கள். இதனால் “பொன்னியின் செல்வன்” நாவலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த 50 வருடங்களாக “பொன்னியின் செல்வன்” நாவல் தமிழின் டாப் மோஸ்ட் நாவலாக இருந்தாலும் , தற்போது மணி ரத்னம் கைவைத்துள்ளதால் அது வேற லெவலில் ரீச் ஆகி வருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
சீயான் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். கார்த்தி வந்தியதேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவையாகவும் வருகின்றனர். மேலும் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும் ஜெயராம் ஆழ்வார்கடியான் நம்பியாகவும் வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னத்திற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவரை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணி ரத்னம் விரைவில் குணமாக வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர்.
மணி ரத்னத்திற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின் தகுந்த சிகிச்சையால் குணமாகி வந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
