CINEMA
மணி ரத்னம் ஏன் இப்படி பண்ணுகிறார்? சோகத்தில் ரசிகர்கள்
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை குறித்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். ஏன் தெரியுமா?
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மணி ரத்னம் இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அதில் விக்ரம் நெற்றியில் வெற்றித் திலகம் இட்டு குதிரையின் மேல் போர் வீரன் போல் உட்கார்ந்தபடி மாஸாக காட்சித் தந்தார்.
அதனை தொடர்ந்து கார்த்தி ஏற்று நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அதில் கார்த்தி குதிரை மேல் கம்பீரமான தோற்றத்துடன் தென்பட்டார்.
இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” டீசர் குறித்தான ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது வருகிற ஜூலை மாதம் 11 ஆம் தேதி “பொன்னியின் செல்வன்” டீசர் வெளிவரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் டீசரை தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் இதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது.
இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கும் நிலையில் படக்குழு எந்த வித முக்கிய அப்டேட்டுகளையும் இது வரை வெளியிடவில்லை. மேலும் படத்தின் டீசர் குறித்து இன்னும் அதிகார்ப்பூர்வமாக எதுவும் வெளியிடவில்லை. ஆதலால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
