CINEMA
“ஹேப்பி பர்த்டே மாளு”.. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மின்னிய மாளவிகா மோகனன்.. வைரல் வீடியோ
மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாளவிகா மோகனன் இளைஞர்களிடையே டாப் மாடல் அழகியாக திகழ்ந்து வருபவர். இவரது கட்டழகில் மயங்காத ஆண்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது உடலை செழிப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார்.
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தமிழில் “பேட்ட” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “மாஸ்டர்”, “மாறன்” என பல திரைப்படங்களில் நடித்து அழகு பதுமையாக நமது உள்ளங்களை கொள்ளைக் கொண்டார்.
தற்காலத்தில் கிளாமர் கியூன் என்று அழைக்கப்படுபவர் மாளவிகா மோகனன் தான். சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவு கடற்கரையில் அவர் திறந்த புத்தகமாக வெளியிட்ட பல கிளாமர் புகைப்படங்கள் ஒவ்வொரு இளைஞனையும் திக்கு முக்காட வைத்தது. அதனை தொடர்ந்து எப்போது மாளவிகா மீண்டும் மாலத்தீவு போவார்? என பலரும் ஆவலோடு இருக்கின்றனர்.
எனினும் ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் மாளவிகா சிக்கனம் காட்டுவதில்லை. கிடைக்கிற கேப்பில் எல்லாம் தனது பொன்னிற மேனியை காட்டி பார்வையாளர்கள் மனதில் குதிரையை ஓடவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர் கேக் வெட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் நிலவை போல் ஜொலி ஜொலிக்கிறார் மாளவிகா மோகன். அந்த வீடியோ இதோ..
.@MalavikaM_ Birthday Celebration 🤩 pic.twitter.com/raszRYdSDt
— Malavika Mohanan Fans (@MalavikaM_Fans) August 4, 2022
மாளவிகா மோகனன் சமீபத்தில் ஹிந்தியில் ஒரு ஆல்பம் பாடலில் டாப் கிளாமரில் வலம் வந்தார். அந்த பாடலில் சற்றே தனது பொன்னிற மேனியை தூக்கலாக காட்டி இளைஞர்களை அதிர வைத்தார் என்பது கூடுதல் தகவல்.
