CINEMA
விஜய் படத்தில் மகேஷ் பாபுவா? வேற லெவல் காம்போவா இருக்கே!!
விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது “தளபதி 66” திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது கௌரவ தோற்றத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார்.
“தளபதி 66” திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடப்பள்ளியும் நடிகர் மகேஷ் பாபுவும் பல கால நண்பர்கள். மகேஷ் பாபுவிடம் வம்சி, விஜய் நடித்து வரும் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாராம். நண்பனின் கோரிக்கையை தவிர்க்க முடியாததால் மகேஷ் பாபு ஒத்துக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த “சர்க்காரு வாரி பட்டா” திரைப்படம் சக்கை போடு போட்டது.
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்க்கு எந்த அளவு மாஸ் உண்டோ அதே அளவு மாஸ் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கும் உண்டு. மகேஷ் பாபு நடித்த பல வெற்றித் திரைப்படங்களை விஜய் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய்யும் மகேஷ் பாபுவும் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
“தளபதி 66” திரைப்படத்தில் ராஷ்மிகா மாந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது.