CINEMA
“என் பெயரை பயன்படுத்தி பண மோசடி”… பிரபல சின்னத்திரை நடிகை மீது பாடலாசிரியர் சினேகன் புகார்..
தன் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்கிறார் என பிரபல சின்னத்திரை நடிகையின் மீது புகார் அளித்துள்ளார் பாடலாசிரியர் சினேகன்.
சினேகன் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர். இவர் சமீபத்தில் கன்னிகா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஏழைகளுக்கு உதவும் வகையில் “சினேகம்” என்ற ஒரு தன்னார்வ அமைப்பை பாடலாசிரியர் சினேகன் நடத்தி வருவதாக அறியப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது அமைப்பின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்கிறார்கள் என சினேகன் புகார் அளித்துள்ளார்.
அதாவது “என்னுடைய சினேகம் பவுண்டேஷன் எனது சொந்த பணத்தால் நடந்து வருகிறது, நான் யாரிடமும் சென்று பணம் கேட்டதில்லை. ஆனால் சமூக வலைத்தளத்தில் என் பெயரை பயன்படுத்தி பண மோசடி நடக்கிறது என எனது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
அதனை மேலும் விசாரித்து பார்த்ததில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தான் இதனை செய்கிறார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தற்போது போலீஸில் இது குறித்து புகார் அளித்துள்ளேன்” என கூறியுள்ளாராம்.
இது குறித்து நடிகை ஜெயலட்சுமி “சினேகன் ஃபவுண்டேஷன் பெயர் கூட எனக்கு தெரியாது. என்னுடைய ஃபவுண்டேஷனின் பெயர் சினேகம். நான் என்னுடைய சம்பளத்தில் இந்த பவுண்டேஷனை நடத்திக்கொண்டு வருகிறேன்” என கூறியுள்ளாராம்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக எழுந்துள்ளது. நடிகை ஜெயலட்சுமி பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராவார். ஜெயலட்சுமி மீது ஏற்கனவே கந்து வட்டி புகார் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.