CINEMA
லோகேஷ் படத்தில் விஜய்யின் கெட் அப் என்ன தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் தெரியுமா?
நடிகர் விஜய் தற்போது “தளபதி 66” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, சரத்குமார், யோகி பாபு, சங்கீதா, ஷாம், பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். “தளபதி 66” திரைப்படத்திற்கு “வாரிசு” என பெயர் வைத்திருப்பதாக வதந்தி பரவி வருகிறது.
மேலும் வருகிற விஜய் பிறந்தநாள் அன்று “தளபதி 66” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “தளபதி 66” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க Family entertainer ஆக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தளபதி 66” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைய உள்ளார். “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது திரைப்படம் இது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் விஜய் கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படம் வேற லெவல் ஹிட் ஆகி உள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆஃஃபிஸில் ரூ. 300 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. இதனால் விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படமும் மாஸ் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய “மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய் இதற்கு முன் நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல் “தளபதி 67” திரைப்படத்திலும் வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.