CINEMA
கைதி பார்த்துட்டு “விக்ரம்” போங்க… லோகேஷ் வேண்டுகோள்
“கைதி” திரைப்படத்தை பார்த்து விட்டு “விக்ரம்” திரைப்படத்திற்கு செல்லுங்கள் என லோகேஷ் ரசிகர்களை கேட்டுக் கொண்டது ஏன்?
கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது. காலை 4 மணி காட்சிக்கே ரசிகர்களின் கூட்டத்தால் திரையரங்கங்கள் திருவிழா போல் காட்சி தந்தன.
மேலும் படம் குறித்தான பாராட்டுகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இதனிடையே லோகேஷ் கனகராஜ் தனது ரசிகர்களிடம் சில வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.
அதில் “எனது திரைப்படங்களில் விக்ரம் திரைப்படத்திற்கு தான் இவ்வளவும் எமோஷனலாக உள்ளேன். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் உலக நாயகன் ரசிகன். இன்று அவரை வைத்து இயக்கி உள்ளது விசித்திரமாக உள்ளது.
இதனை நிறைவேற்ற உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நமது நாட்டின் பெருமையான உலக நாயகனை கொண்டாடும் விதமாகவும் , உங்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் வியர்வை, ரத்தம் அனைத்தையும் சிந்தி இருக்கிறோம். நான் “விக்ரம்” திரைப்படத்திற்காக பணியாற்ற தொடங்கி 18 மாதங்கள் ஆகின்றது.
உலக நாயகன் சார், உங்களை இயக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை உங்களுக்கு பரிசளிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் “விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு நல்ல தியேட்டர் experience ஆக இருக்கும் என நம்புகிறேன். எனினும் தயவு கூர்ந்து விக்ரம் என்ற உலகத்திற்கு செல்லும் முன் கைதியை பார்த்து விட்டு செல்லுங்கள்” என லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் “கைதி” திரைப்படத்தை பார்ப்பதற்கு விரைகின்றனர். இதை வைத்து “கைதி” திரைப்படத்தின் ஒரு தொடர்ச்சியாக “விக்ரம்: இருக்கலாம் என வியூகிக்க முடிகிறது.
