CINEMA
லட்சுமி ராய்யுடன் குத்தாட்டம் போடும் “லெஜண்ட்” சரவணா..
“லெஜண்ட்” திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “வாடிவாசல்” பாடல் வெளிவந்தது.
சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் பல பல கெட் அப்களில் தோன்றி பட்டையை கிளப்பி வந்தார். அதனை தொடர்ந்து ஒரு நாள் சரவணன் அருள் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று வந்த தகவல் திரையுலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
மேலும் அத்திரைப்படத்தை பிரபல இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர் என்றதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஆச்சரியம் நிற்காமல் தொடர்ந்தது. அதாவது அத்திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அது மட்டும் அல்லாமல் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ் என்பதும் படத்தொகுப்பு ரூபன் என்பதும் பார்வையாளர்களை “ஓ” போட வைத்தது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்திற்கு “லெஜண்ட்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவலும் வந்தது.
மேலும் “லெஜண்ட்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து மாஸ் காட்டியது. லெஜண்ட் சரவணன் மாஸ் ஹீரோவை போல் ஸ்டைலாக தோற்றம் அளித்து நம்மை அசரவைத்தார்.
இதனை தொடர்ந்து லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மொசலோ மொசலு’ பாடல் வெளிவந்து பட்டைய கிளப்பியது. பாடலில் இளம்பெண்கள் ஸ்டைலாக ஆடைகள் அணிந்து பெண்களை சுற்றி சுற்றி வரும் ரோமியோவாக காட்சி தந்தார். அது மட்டுமல்லாமல் அப்பாடலில் அவரது நடனமும் லைக்ஸ்களை அள்ள வைத்தது. அப்பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் பிரபல நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் தற்போது “லெஜண்ட்” திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “வாடிவாசல்” பாடல் வெளிவந்துள்ளது. இப்பாடலில் திருவிழா செட் அப்பில் கலக்கலாக வந்து லட்சுமி ராய்யுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் லெஜண்ட் சரவணா. இப்பாடலை பென்னி தயல் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். சினேகன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். லட்சுமி ராய்யிற்கு ஈக்குவலாக பெர்ஃபார்மன்ஸ் செய்து கலக்கும் ‘லெஜண்ட்’ சரவணனின் ஆட்டம் பட்டையை கிளப்பியுள்ளதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
