CINEMA
“லெஜண்ட்” ஆடியோ லாஞ்சில் இத்தனை நடிகைகளா? ரசிகர்களை வாயை பிளக்க வைத்த அண்ணாச்சி..
“லெஜண்ட்” சரவணன் நடிப்பில் உருவாகி வரும் “லெஜண்ட்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் எத்தனை முன்னணி ஹீரோயின்கள் கலந்து கொள்ள உள்ளனர் தெரியுமா?
சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் பல பல ஹீரோயின்களுடன் பல பல கெட் அப்களில் தோன்றி பட்டையை கிளப்பி வந்தார். அதனை தொடர்ந்து ஒரு நாள் சரவணன் அருள் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று வந்த தகவல் திரையுலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
மேலும் அத்திரைப்படத்தை பிரபல இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர் என்றதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஆச்சரியம் நிற்காமல் தொடர்ந்தது. அதாவது அத்திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அது மட்டும் அல்லாமல் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ் என்பதும் படத்தொகுப்பு ரூபன் என்பதும் பார்வையாளர்களை “ஓ” போட வைத்தது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்திற்கு “லெஜண்ட்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவலும் வந்தது.
மேலும் “லெஜண்ட்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து மாஸ் காட்டியது. லெஜண்ட் சரவணன் மாஸ் ஹீரோவை போல் ஸ்டைலாக தோற்றம் அளித்து நம்மை அசரவைத்தார்.
இதனை தொடர்ந்து “லெஜண்ட்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மொசலோ மொசலு’ பாடல் வெளிவந்து பட்டைய கிளப்பியது. அதனை தொடர்ந்து லட்சுமி ராய்யுடன் சரவணன் குத்தாட்டம் போட்ட “வாடி வாசல்” பாடலும் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இதனிடையே “லெஜண்ட்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் ஆச்சரியப்படும் வகையில் எத்தனை முன்னணி ஹீரோயின்கள் கலந்து கொள்ள உள்ளனர் தெரியுமா?
பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, லட்சுமி ராய், ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், நிபுர் சனோன், டிம்பிள் ஹராத்தி, ஸ்ரீலீலா, ஊர்வசி ரௌதேலா ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இச்செய்தி கோலிவுட் வட்டாரங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
View this post on Instagram
