CINEMA
“காதலுக்கு வயதில்லை”…. முன்னாள் ஐபிஎல் சேர்மனுடன் டேட்டிங்கில் சுஸ்மிதா சென்..
பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் முன்னாள் ஐபிஎல் சேர்மனுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் கடந்த 1994 ஆம் ஆண்டு பிரபஞ்ச இந்திய அழகி என்ற பட்டத்தை வாங்கியவர். இவர் ஹிந்தியில் மாஸ் ஹிட் ஆன பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாகர்ஜூனா நடித்த “ரட்சகன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதே போல் அர்ஜூன் நடித்த “முதல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “சக்கலக்க பேபி” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான “ஆர்யா” வெப் சீரீஸில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சுஸ்மிதா சென்னும் முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடியும் டேட்டிங் செய்து வருகிறார்கள். 46 வயதுடைய சுஸ்மிதா சென் இதற்கு முன் ரோமன் ஷால் என்பவருடன் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை உறவில் இருந்தார். அதன் பின் லலித் மோடியுடன் தற்போது உறவில் இருக்கிறார்.
இருவரும் மாலத்தீவிற்கு டேட்டிங் போன புகைப்படங்களை லலித் மோடி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் லலித் மோடி ஐபிஎல் சேர்மனாக இருந்த போது சுஸ்மிதாவை அவ்வப்போது யதார்த்தமாக சில விழாக்களில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
View this post on Instagram
Just for clarity. Not married – just dating each other. That too it will happen one day. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 pic.twitter.com/Rx6ze6lrhE
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
அதே போல் லலித் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு “நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங்கில் தான் இருக்கிறோம். ஒரு நாள் திருமணமும் நடைபெறும்” என கூறியுள்ளார்.
View this post on Instagram
சுஸ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்களையும் கூடவே அழைத்து கொண்டு தனது காதலருடன் பயணம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
