CINEMA
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் இது தான்..
நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர். கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் குடியேறி குடித்தனம் நடத்தி வருபவர்.
திரைத்துறையில் பல கஷ்டங்களையும், விமர்சனங்களையும் கடந்து வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இத்தனை வருடங்கள் சினிமாவில் கதாநாயகியாக ஜெயித்து வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த அளவிற்கு நயன்தாரா உழைப்பைப் போட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் Live in-ல் இருந்த நயன்தாரா சென்ற மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் உள்ளூர் சூப்பர் ஸ்டார்கள் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் வரை கலந்து கொண்டனர்.
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் “O2” திரைப்படம் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மலையாளத்தில் பிரித்விராஜ்ஜுடன் “கோல்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். “பிரேமம்” இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கி உள்ள இத்திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
அதனை தொடர்ந்து நயன்தாரா, ஷாருக் கான் நடித்து வரும் “ஜவான்” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். இத்திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸுடன், டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க உள்ளனர்.
Announcing #ladySuperstar75 🥳
Zee Studios is excited to collaborate with #Nayanthara for her 75th film! 💃🏻
The shoot will begin soon! 🎬#Jai #SathyaRaj @Nilesh_Krishnaa @dineshkrishnanb @tridentartsoffl @Naadstudios pic.twitter.com/nVVCnLek83— Zee Studios (@ZeeStudios_) July 12, 2022
இதில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
