CINEMA
“விக்னேஷ் சிவன் நல்லா ஜாலியா இருக்காரே” படப்பிடிப்பில் கலகலப்பு..KVRK மேக்கிங் வீடியோ
“காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்துள்ளது. அதில் விக்னேஷ் சிவன் மிகவும் கலகலப்பாக டைரக்ட் செய்கிறார்.
சமீபத்தில் வெளியான “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் பல பாசிட்டிவ் ரிவ்யூக்களே வாங்கியது. ஒரு எமோஷனலான கதைக்களத்தில் ஜாலியான திரைக்கதையை புகுத்தி பார்வையாளர்களை சுவாரசியப்படுத்தியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். திரைப்படத்தில் நடித்திருந்த இளைஞர்களின் கனவு நாயகிகளான நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்தது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
விஜய் சேதுபதியின் கலகலப்பான நடிப்பும் பார்வையாளர்களை ஈர்த்தது. விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரமான ரேம்போவின் அசட்டுத்தனம் நிறைந்த நடிப்பை திறமையாகயாகவே வெளிப்படுத்தியிருந்தார்.
“ஐ லவ் யூ டூ” என்று நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் கைக்காட்டி விஜய் சேதுபதி வசனம் கூறும்போது திரையரங்கமே ரசித்தது. கதீஜா, கண்மணி என மாறி மாறி இளசுகளின் மனசை கவ்வி கொண்டு போனார்கள் நயன் தாராவும் சமந்தாவும். எவரை பார்க்க, எவரை தவிர்க்க என இளைஞர்கள் குழம்பிப் போனார்கள்.
“ஐ லவ் யூ டூ” என்ற பாடலில் கலக்கலாக மூவரும் குத்தாட்டம் போட்டது பார்வையாளர்களை அதிக குஷி படுத்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் கலகலப்பான மேக்கிங் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் விக்னேஷ் சிவன் எந்த வித சீரியஸ்னஸும் இன்றி ஜாலியாக டைரக்ட் செய்கிறார். படக்குழுவே மிகவும் கலகலப்பாக இருக்கிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா, பிரபு, கிங்க்ஸ்லீ என அனைவரும் படபடப்பிடிப்பு என்ற சிந்தனையே இல்லாமல் ஜாலியாக நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்தவுடன் இணையத்தில் பலரும் பகிர ஆரம்பித்துவிட்டார்கள். “விக்னேஷ் சிவன் நல்ல ஜாலியான ஆல் போல” என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.