CINEMA
ஷாலினி படத்தை நான் பண்ணிருக்கனும்… வருத்தத்தில் கிரீத்தி ஷெட்டி
கிரீத்தி ஷெட்டி அந்த ஷாலினி படத்தில் தான் நடித்திருக்க வேண்டும் என கூறியது தற்போது வைரல் ஆகி வருகிறது.
தென் இந்தியாவின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் கிரீத்தி ஷெட்டி. தெலுங்கில் வெளிவந்த முதல் திரைப்படமான “உப்பண்ணா” திரைப்படத்திலேயே தனது பார்வையால் கொக்கி போட்டு ரசிகர்களை தூக்கி தொங்கவிட்டு விட்டார்.
அதன் பின் நாக சைதன்யாவுடன் “பங்காரு ராஜு”, நானியுடன் “ஷ்யாம் சிங்கா ராய்” என டாப் ஹீரோக்களின் கதாநாயகியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் “தி வாரியர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “புல்லட்” பாடல் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. அதில் கிரீத்தி அணிந்திருக்கும் சிக்கென்ற உடையில் கவர்ச்சியாக ஆடிய நடனம் பார்வையாளர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் “தி வாரியர்” திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் கிரீத்தி ஷெட்டி கலந்து கொண்டார். அதில் நிரூபர் “நீங்கள் இந்த தமிழ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எந்த தமிழ் திரைப்படத்தில் நடிப்பீர்கள்?” என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த கிரீத்தி ஷெட்டி “அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினி கதாப்பாத்திரத்தில் எனக்கு நடிக்க வேண்டும் என ஆசை” என்று கூறினார்.
மேலும் நிரூபர் “தமிழில் எந்த திரைப்படத்தை அதிகமாக பார்த்துள்ளீர்கள்?” என கேட்டார். அதற்கு கிரீத்தி ஷெட்டி, “கார்த்தி நடித்த பையா படத்தை தான் அதிகமாக பார்த்திருக்கிறேன். கிட்டதட்ட 100 தடவையாவது பார்த்திருப்பேன்” என கூறினார்.
தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் “வணங்கான்” திரைப்படத்தில் கிரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். கிரீத்தி ஷெட்டி தமிழுக்கு என்ட்ரி கொடுப்பதால் தமிழ் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
