Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கோவை சரளா கதாநாயகியா? அசத்தல் தான் அப்போ..

CINEMA

கோவை சரளா கதாநாயகியா? அசத்தல் தான் அப்போ..

கோவை சரளா கதாநாயகியாக நடித்த புதிய திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இருந்தாலும், பெண் நகைச்சுவை நடிகைகளை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த வரிசையில் பல வருடங்கள் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் கோவை சரளா.

நகைச்சுவை மட்டும் அல்லாது சிறந்த துணை கதாப்பாத்திரமாகவும் திகழ்ந்து வருபவர். இவரும் வடிவேலுவும் ஜோடியாக நடித்த எண்ணற்ற திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்தாலே திரைப்படம் கலகலப்பாக செல்லும். வடிவேலு மட்டுமல்லாது செந்தில் கவுண்டமணி காம்போவுடன் பல படங்களில் கலக்கி இருப்பார். குறிப்பாக “கரகாட்டக்காரன்” திரைப்படத்தை உதாரணமாக சொல்லலாம்.

நகைச்சுவை மட்டுமல்லாது சென்டிமன்ட் காட்சிகளிலும் நெகட்டிவ் ரோல்களிலும் கச்சிதமாக நடிக்ககூடியவர் கோவை சரளா. இந்நிலையில் கோவை சரளா பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதாக அறிவிப்பு வந்தது.

அதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் போஸ்டரும் வெளிவந்தது. திரைப்படத்திற்கு “செம்பி” என பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் கோவை சரளா முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு முழு திரைப்படத்தையும் தோளில் தாங்குகிறார் என தெரிய வருகிறது. இந்த டிரைலர் ஒரு பேருந்து தன்னுடைய கதையை கூறுவது போல் தொடங்குகிறது.

கோவை சரளா மலைவாழ் மக்களின் தோற்றத்தில் இருக்கிறார். இதற்கு முன் பிரபு சாலமன் இயக்கிய “மைனா”, “கும்கி” ஆகிய திரைப்படங்களை போல் இதுவும் மலையும் மலை சார்ந்த பகுதியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது.

கோவை சரளா பெற்றோரை இழந்த குழந்தையை வளர்க்கும் பாட்டியாக நடிக்கிறார். குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் பேருந்து முக்கிய கதாப்பாத்திரம் போல் தெரிகிறது.

பிரபு சாலமன் திரைப்படத்தில் வழக்கமாக தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் பஸ் கன்டெக்டராக வருகிறார். “செம்பி” திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top