CINEMA
பாடகர் கே கே கடைசி நிமிடங்கள்.. இணையத்தில் வைரலாகும் உருக்கமான வீடியோ
மறைந்த பாடகர் கே கே கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியில் அவருக்கு அதிகமாக வியர்வை வெளிவருவதாக கூறும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிண்ணனி பாடகர் கே கே நேற்று கொல்கத்தாவின் நஸ்ரூல் மான்சா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனை தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு மேடையிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அதற்கு காரணம் அரங்கில் குளிரூட்டும் சாதனம் சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் கே கே மேடையில் இருக்கும் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் தனக்கு வியர்வை அதிகமாக வருகிறது எனவும் AC-ல் காற்று வரவில்லை எனவும் கூறியவாறு தெரிகிறது.
நஸ்ரூல் மான்சா அரங்கம் காற்று புகாதவாறு அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அரங்கில் பல்லாயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியை பார்க்க கூடியிருந்ததாகவும் தெரிகிறது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ஒருவர் அதில் அந்த வீடியோவை குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் “கே கே அரங்கு நிர்வாகத்திடம் பல முறை AC-ஐ போடுங்கள் எனவும், சில விளக்குகளை அணையுங்கள் எனவும் கூறியுள்ளார். அரங்கம் ஏற்கனவே வெக்கை நிறைந்ததாக இருந்திருக்கிறது. மேலும் பார்வையாளர்கள் முந்திக்கொண்டு கதவை பிளந்து கொண்டெல்லாம் வருகிறார்கள். காவலாளிகள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கே கேவிற்கு நெஞ்சு வலி என காரணம் கூறினாலும் போலீஸார் இது இயற்கை மரணம் அல்ல என பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.