CINEMA
“வெளியானது கே. ஜி. எஃப். மெஹபூபா பாடல்”..
“கே. ஜி. எஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “மெஹபூபா” பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
“கே. ஜி. எஃப்” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடிகளுக்கு மேல் அள்ளிக்கொண்டு இருக்கிறது.
“கே. ஜி. எஃப்.” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் Goosebumps காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. மேலும் திரைப்படத்தின் இடை இடையே வரும் அம்மா சென்டிமென்ட்களும் “தன்னானத்தானே” குரலும் நம்மை நெகிழச்செய்யவும் தவறவில்லை.
கடந்த அன்னையர் தினம் அன்று “கே. ஜி. எஃப் 2” திரைப்படத்தின் “அகிலம் நீ” என்ற பாடல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரொமாண்டிக் பாடலான “மெஹபூபா” பாடல் வெளிவந்துள்ளது.
திரைப்படத்தின் கதாநாயகி ராக்கியின் மேல் அன்பு வராத நிலையில் ஒரு தருணத்தில் காதல் மலர்கிறது. அப்போது இடம்பெறும் பாடலே “மெஹபூபா” பாடல். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே காதல் பாடல் இது தான். ஸ்ரீநிதி ஷெட்டி இளமை ததும்ப கண்களில் காதல் ரசத்துடன் ஹீரோவை அணுகி பாடுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். தற்போது இப்பாடல் இணையத்தில் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் கே. ஜி. எஃப் மற்றும் கே. ஜி. எஃப் 2 ஆகிய திரைப்படங்களில் பத்திரிக்கையாளருக்கு ராக்கி பாய்-ன் வரலாற்றை மிடுக்கோடும் கம்பீரத்தோடும் வர்ணிக்கும் கதாப்பாத்திரமாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருத்த மோகன் ஜூனேஜா உடல் நிலை சரியில்லாத நிலையில் காலமானார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் “கோப்ரா” திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
