CINEMA
“இவரால தான் என் வாழ்க்கையே மாறுச்சு”; நெகிழும் கே. ஜி. எஃப் கதாநாயகி..
தனது வாழ்க்கையையே மாற்றி போட்ட நபரை பற்றி கே. ஜி. எஃப் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கே. ஜி. எஃப். இத்திரைப்படம் பல இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கே. ஜி.எஃப். திரைப்படத்தின் இரண்டாம் சேப்டர் வெளிவந்தது. இந்திய அளவில் அசூர வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிட்டு வருகிறது இத்திரைப்படம். கிட்டத்ததட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலே வெளியானது. அதிக ஹவுஸ் ஃபுல் ஷோக்களால் பல திரையரங்குகள் திருவிழா ஆனது. தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டன. வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலும் சக்கை போடு போட்டு கொண்டிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் விக்ரம் நடிப்பில் வெளியாகவிருக்கும் “கோப்ரா” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கே. ஜி. எஃப். 2 திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது அப்படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் தான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“நம்முடைய சொந்த முடிவுகள் நமது வாழ்வை மாற்றும் போதும், நமது கனவை மெய்யாக்க உதவி புரிவது போலும், சில நேரங்களிலும் சொற்பமாக யாரோ ஒருவரின் முடிவும் அதையே செய்யக்கூடும். பிரஷாந்த் என்னை தேர்ந்தெடுத்தார், என்னுடைய வாழ்வை மாற்றினார். அனைத்திற்கும் நன்றி பிரஷாந்த்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இப்பதிவு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.