CINEMA
கே ஜி எஃப் இயக்குனரின் மாஸ் காட்டும் “சலார்”…
“கே ஜி எஃப்”, “கே ஜி எஃப் 2” போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “கே ஜி எஃப்” திரைப்படம் யாரும் எதிர்பார்த்திரா வகையில் வேற லெவல் ஹிட் அடித்தது. தென்னிந்தியா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது.
சைலன்ட்டாக வந்து திடீரென பிளாக் பஸ்டரை கலக்கிய “கே ஜி எஃப்” திரைப்படத்தை பார்த்து பலரும் வியந்து போயினர். இத்திரைப்படத்தின் ஹீரோ யாஷின் மார்க்கெட் லெவல் எகிறியது. இத்திரைப்படம் வெளியான போது இந்திய திரை உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
“கே ஜி எஃப்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு “கே ஜி எஃப்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ராட்சசன் போல் வெளிவந்தது “கே ஜி எஃப் 2” திரைப்படம். “கே ஜி எஃப்” முதல் பாகத்தை தூக்கி சாப்பிடும் வகையில் மாஸ் என்டெர்டெயினராக ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியது என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் “கே ஜி எஃப்” திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது “சலார்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் “பாகுபலி” புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பிரபாஸ் இரண்டு கைகளிலும் கத்தியுடன் டெரிஃபிக்காக தென்படுகிறார்.
View this post on Instagram
“சலார்” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.