CINEMA
“கே ஜி எஃப்” இயக்குனரின் அடுத்த படம்? யார் ஹீரோ தெரியுமா?
“கே. ஜி. எஃப்” திரைப்படத்தின் இயக்குனர் அடுத்து யாருடன் இணைந்து இயக்கப்போகிறார் தெரியுமா?
“கே. ஜி. எஃப் 2” திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகிய நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. வேர்ல்டு லெவல் பாக்ஸ் ஆஃபீஸில் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மாஸ் காட்டி வருகிறது.
இதனை தொடர்ந்து “கே. ஜி. எஃப்” திரைப்படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் “சலார்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்திரைப்படம் முடிந்த கையோடு அதற்கு அடுத்து யாருடன் கை கோர்க்க போகிறார் தெரியுமா?
“RRR” திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் முக்கிய நடிகராக பிரபலமாகியிருக்கும் ஜூனியர் என் டி ஆர் உடன் தான் அடுத்ததாக கை கோர்த்திருக்கிறார். தற்போது ஜூனியர் என் டி ஆர்-ன் 30 ஆவது திரைப்படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். இதனை தொடர்ந்து 31 ஆவது திரைப்படத்தில் பிரஷாந்த் நீலும் ஜூனியர் என் டி ஆர்-ம் இணையவுள்ளனர்.
இத்திரைப்படத்தின் மாஸான அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. படத்திற்கு இன்னும் டைட்டில் முடிவாகாத நிலையில் “NTR 31” என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்போஸ்டர் ஜூனியர் என் டி ஆர் பிறந்த நாளில் வெளிவந்துள்ளது.
“கே. ஜி. எஃப் 2” திரைப்படம் போலவே “RRR”திரைப்படமும் பிரம்மாண்டமாக வெளிவந்தது. அத்திரைப்படமும் வேர்ல்டு லெவல் பாக்ஸ் ஆஃபீஸில் 1000 கோடியை அள்ளியது. இந்நிலையில் “கே. ஜி. எஃப்” இயக்குனரும் ஜூனியர் என் டி ஆர்-ம் இணையவுள்ளது ரசிகர்களின் எக்ஸ்பக்டேஷனை எகிறவைத்துள்ளது.