Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்குறாங்க பாருங்க..

CINEMA

மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்குறாங்க பாருங்க..

மேக்கப் எதுவும் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

திரைத்துறையில் கதாநாயகியாக நடிக்க வந்த தொடக்கத்தில் Chubby-யாகவும் க்யூட்டாகவும் இருந்த கீர்த்தி சுரேஷ் காலப்போக்கில் சிக்கென்று ஹாட் பறவையாக சுற்றிக் கொண்டு வருகிறார்.

இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்றாலும் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் “மகாநடி”. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியானது. நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “மகாநடி”-ல் சாவித்ரியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமா உலகமே “ஆ” வென பார்த்தது. “கீர்த்தியா இப்படி வெளுத்து வாங்குவது” என பலரும் பாராட்டினர். மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி சுரேஷ்.

அதன் பின் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “சாணி காயிதம்” திரைப்படம் அவர் நடிப்பின் மற்றொரு ரூபத்தை காட்டியது. வன்முறை காட்சிகளில் கண்களில் காளியே தாண்டவம் ஆடுவது போல் நடித்து “ஓ” போட வைத்தார். மேலும் சமீபத்தில் வெளியான “சர்க்காரு வாரி பட்டா” திரைப்படத்தில் கவர்ச்சியாக வலம் வந்து உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

எப்போதும் நடிகைகள் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட தயக்கம் காட்டுவார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் எந்த தயக்கமும் இல்லாமல் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேக்கப் இல்லை என்றாலுமே கீர்த்தி மிகவும் க்யூட்டாக அழகாக இருக்கிறார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்புகைப்படம் இதோ…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top