CINEMA
மேக் அப் இல்லைனாலும் கீர்த்தி சுரேஷ் அழகு தான்…
கீர்த்தி சுரேஷ் மேக் அப் இல்லாமல் இருக்கும் தனது முகத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த புதிதில் மிகவும் Chubby மற்றும் கியூட் கேர்ளாக இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டு போனார். அதன் பின் தனது உடலை மெருகேற்றி மாடல் அழகியாக தற்போது உருமாறி உள்ளார்.
தொடக்கத்தில் ஹோம்லி கேர்ளாகவே வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹாட் கதாநாயகியாக திரிகிறார். இவரா இப்படி? என பலரும் வாயைப் பிளந்து கொண்டு பார்க்கின்றனர்.
சமீபத்தில் நடித்த பல திரைப்படங்களில் அனலைக் கிளப்பும் ஆடைகளுடன் பலரையும் கவ்விக் கொண்டு கடத்தி சென்று வருகிறார். மேலும் கியூட்டாக பல ரியாக்சன்களை தந்து மனதை கொக்கிப் போட்டு இழுத்துக் கொண்டு போகிறார்.
இந்த ட்ரன்ஸ்ஃபர்மேஷன் இவரை எங்கோ கொண்டு சென்றுள்ளது. தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாளத்தில் “வாசி” என்ற திரைப்படத்தில் கியூட்டாக வலம் வந்து நம்மை அசர வைத்தார்.
வாசி” திரைப்படத்தில் வக்கீலாக வந்த கீர்த்தி சுரேஷை பார்த்து “இவ்வளவு அம்சமான வக்கீலை எங்கும் பார்த்ததில்லை” என்பது போல் ரசிகர்கள் கம்மென்ட் அடித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் பல நாட்களாக மேக் அப் இல்லாமல் இருக்கும் தனது முகத்தை செல்ஃபி எடுத்து அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது காலை எழுந்தவுடன் தென்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் “No Filter” என குறிப்பிட்டுள்ளார்.
“மேக் அப் இல்லை என்றாலும் கீர்த்தி அழகு” தான் என பலரும் கம்மென்ட் அடித்து வருகின்றனர்.