CINEMA
கொலை வெறியில் பூசணிக்காயை கோடாரியால் வெட்டிய கீர்த்தி சுரேஷ்…. பாராட்டிய செல்வராகவன்..
சாணி காயிதம் திரைப்படத்தை தொடர்ந்து கிர்த்தி சுரேஷும் செல்வராகவனும் பூசணிக்காயை கோடாரியால் வெட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.
செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடித்து சென்ற வாரம் வெளியான திரைப்படம் சாணி காயிதம். இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்று இருந்தன.
பொன்னி கதாப்பாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் பலி வாங்குவது போல் நடித்த காட்சிகள் பார்வையாளர்களை மிரளவைத்தது. ஒவ்வொரு முறையும் கீர்த்தி சுரேஷ் கோபக்கனலாய் பலிவாங்கும் போது அவரது கண்களில் கொலைவெறி தாண்டவ மாடியது. அந்தளவுக்கு நேர்த்தியாக நடித்திருந்தார்.
அதே போல் சங்கையா கதாப்பாத்திரத்தில் நடித்த செல்வராகவன், கண்களில் அனல் தெறிக்க நடித்திருந்தார். இருவரும் வன்முறை வெறியாட்டத்தை நம் கண்களின் முன் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகிய இருவரும் சாணி காயிதம் திரைப்படத்தில் வருவது போல் ஒரு பூசணிக்காயை கோடாரியால் வெட்ட வேண்டும் என டாஸ்க் தரப்பட்டது. கீர்த்தி சுரேஷ் பூசணிக்காயை கோடாரியால் ஒரு வெட்டி வெட்டினார். அவ்வளவாக உள்ளே இறங்கவில்லை. மாறாக செல்வராகவன் ஒரே வெட்டில் பூசணிக்காயை இரண்டாக பிளந்தார்.
மேலும் கீர்த்தி சுரேஷிடம் “பூசணிக்காயை படத்தில் வரும் வில்லனாக நினைத்து வெட்டுங்கள்” என கூறினார். உடனே கிர்த்தி சுரேஷ் கொலைவெறியில் பூசணிக்காயை வெட்டினார்.
மேலும் சாணி காயிதம் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை கூறுமாறு கீர்த்தி சுரேஷ் செல்வராகனிடம் கேட்டார். அதற்கு “உங்களை போன்ற பெரிய நடிகை முன் நடிக்க பயமாக இருந்தது” என கூறினார். அதற்கு கீர்த்தி சுரேஷ் “சார், இது நான் சொல்லனும் சார், உங்கள பார்த்து தான் சார் பயமா இருந்தது” என கூறினார். இருவரும் இவ்வாறு கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
