CINEMA
மகேஷ் பாபுவை கோபத்தில் அடித்துவிட்டேன்… கீர்த்தி சுரேஷ் பகீர்..
மகேஷ் பாபுவை கோபத்தில் தெரியாமல் அடித்துவிட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழில் “இது என்ன மாயம்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த “அண்ணாத்த” திரைப்படத்தில் கூட தங்கை கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த “சாணி காகிதம்” திரைப்படம் வருகிற 6 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அதே போல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அறியப்படுபவர் மகேஷ் பாபு. அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். அவரது படங்கள் ஆந்திரா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பரவலமாக ரசிக்கப்படும். குறிப்பாக தமிழகத்தில் மகேஷ் பாபுவுக்கு மாஸ் ஆடியன்ஸ் உண்டு.
இந்நிலையில் மகேஷ் பாபு, கீர்த்து சுரேஷ் நடிப்பில் “சர்காரு வாரிபட்டா” என்ற தெலுங்கு திரைப்படம் உருவானது. சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் டீசர் ஒன்று வந்தது. அதன் பின் நேற்று இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகியது. பக்கா கம்மெர்சியல் மெட்டீரியலாக இத்திரைப்படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டியின் போது தான் மகேஷ் பாபுவை அடித்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் ,
“சூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்த போது ஒரு தவறு நடந்து விட்டது. அப்போது மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்து விட்டேன். ஆனால் தவறு என் பக்கம் தான். நான் அவரிடம் பல முறை மன்னிப்பு கேட்டேன். அவர் தெரியாமல் நடந்தது தானே, பரவாயில்லை என கூறினார்” என்று கூறியுள்ளார்.
