CINEMA
சரியான சண்ட படமா இருக்கும் போலயே… கார்த்தியின் வெறித்தனமான ஆக்சன் பிளாக்
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான “விருமன்” திரைப்படம் அதிரடியான ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி உள்ளது.
கார்த்திக்கு இந்த வருடத்தில் மட்டும் மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது. “பொன்னியின் செல்வன்”, “சர்தார்”, “விருமன்” என மூன்று திரைப்படங்கள். இதில் “சர்தார்” வருகிற தீபாவளிக்கு வெளியாகிறது. “பொன்னியின் செல்வன்” வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. “விருமன்” வருகிற 12 ஆம் தேதி வெளிவருகிறது.
“விருமன்” திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இவர்களுடன் சூரி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் என பலரும் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் கூட அவரது இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கஞ்சா பூவு கண்ணால” என்ற பாடல் வெளிவந்து பரவலாக ரசிக்கப்பட்டது.
“விருமன்” திரைப்படத்தை 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
“விருமன்” திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது இத்திரைப்படம் அதிரடியான ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளதாக தெரிகிறது. கார்த்தி வெறித்தனமாக இருக்கிறார். அதிதி ஷங்கர் கிராமத்து பெண்ணாக மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார். கியூட்டாக வந்து உள்ளங்களை கொள்ளை கொள்கிறார்.
பிரகாஷ் ராஜ் கார்த்திக்கு தந்தையாக நடிக்கிறார். “4 புள்ள பெத்தேன், அதுல நாளாவது நரகாசூரனா வந்து நிக்குது” என்று பிரகாஷ் ராஜ் பேசும் வசனத்தை வைத்து பார்க்கும்போது தனது மகன் மேல் வெறுப்புள்ள தந்தையாக நடித்திருக்கிறார் என தெரிய வருகிறது. கார்த்தியுடன் சூரியும் இதில் காமெடி காம்போவாக இணைந்திருப்பதால் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை என தெரிகிறது. ஒரு பக்கா கமெர்சியல் படமாக இத்திரைப்படம் நம்மை ரசிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.