CINEMA
டெங்கு காய்ச்சலிலும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை.. படக்குழுவினர் பாராட்டு
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையிலும் படப்பிடிப்பில் நடித்து வருவதாக அறியப்படுகிறது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் “ஃபேஷன்”, “டெஸ்”, “கியூன்”, “மணிகர்ணிகா” என பல வெற்றிடத் திரைப்படங்களில் நடித்தவர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் சமீபத்தில் “தாக்கத்” என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அத்திரைப்படம் படு தோல்வி அடைந்தது. கங்கனா ரனாவத்தின் திரைப்பட வரலாற்றிலேயே இப்படி ஒரு திரைப்படம் இவ்வளவு மோசமான வசூலை ஈட்டியது இல்லை என செய்திகள் வெளிவந்தன. 85 கோடி ரூபாய்க்கு திரைப்படம் எடுத்து வெறும் 3 கோடியே வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
கங்கனா ரனாவத் தமிழில் “தாம் தூம்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட “தலைவி” திரைப்படத்தில் ஜெயா கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கங்கனா ரனாவத் தற்போது “எமர்ஜென்சி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். மேலும் இதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாகவும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கங்கனா ரனாவத்துக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட கங்கனா ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை பாராட்டும் விதமாக கங்கனா ரனாவத்தின் மணிக்கர்ணிகா தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் கங்கனா ரனாவத் டெங்கு காய்ச்சலிலும் பணிபுரியும் புகைப்படங்களை பகிர்ந்து பாராட்டியுள்ளது. அதில் “டெங்கு காய்ச்சல் வந்தால் வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்து போகும் காய்ச்சல் அதிகமாகும். ஆனாலும் நீங்கள் உழைக்கிறீர்கள். இது சினிமா மீதான வேட்கை அல்ல, வெறி” என்று குறிப்பிட்டுள்ளது.