CINEMA
கமலின் அடுத்த படத்திற்கு இவர் தான் மியூசிக்?? மீண்டும் அவருடனா??
கமல் ஹாசனின் புதிய திரைப்படத்திற்கு மீண்டும் இந்த வெற்றி இசையமைப்பாளர் தான் இசையமைக்க உள்ளாராம்.
கமல் ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 300 கோடியை தாண்டி கலெக்சன் அள்ளிக் கொண்டிருக்கிறது. “பாகுபலி 2” திரைப்படத்தின் சாதனையை “விக்ரம்” ஓவர் டேக் செய்து கொண்டிருக்கிறது.
அது மட்டும் அல்லாது கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
“விக்ரம்” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட். குறிப்பாக “பத்தல பத்தல”, “போர் கொண்ட சிங்கம்” “நாயகன் மீண்டும் வரான்” போன்ற பாடல்கள் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தது.
“விக்ரம்” திரைப்படத்தின் பின்னணி இசையிலும் அனிருத் மாஸ் காட்டியிருப்பார். ஒவ்வொரு காட்சியிலும் காட்சிக்கு தகுந்தார் போல் அவரின் இசை ஒட்டி உறவாடும். குறிப்பாக சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கும் பி ஜி எம்கள் ரசிகர்களை Goosebumps-ல் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து கமல் ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்னேஷனல் சார்பாக சோனி பிக்சர்ஸுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். அதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
அத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்நிலையில் அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த ஒரு முக்கிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது “விக்ரம்” திரைப்படத்தில் இசையமைத்த அனிருத் தான் கமல் ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். மேலும் கூடுதல் தகவலாக இத்திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற உள்ளார்களாம்.
அன்பறிவு மாஸ்டர்கள் “விக்ரம்” திரைப்படத்திலும் பணியாற்றி உள்ளனர். தற்போது கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்திற்கும் அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
