CINEMA
“கமல் இறங்கி குத்த போறார்”.. அனிருத்தின் சர்ப்ரைஸ் ட்விட்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் சிங்கிள் இன்று வெளியாகவுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ்-கமல் கூட்டணி மாஸாக கலக்கப்போவது உறுதி என ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேறி கிடக்கிறார்கள்.
அதே போல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மாஸ் ஹீரோக்களின் கூட்டணி வேறு. படம் வெளியாகும் நாளில் நிச்சயம் திருவிழா தான் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவந்தது.
மே 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்நிலையில் இன்று “விக்ரம்” திரைப்படத்தின் “பத்தல பத்தல” சிங்கிள் வரவிருக்கிறது. இப்பாடலை கமல்ஹாசனே பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் “பத்தல பத்தல- உலக நாயகன் கமல்ஹாசன் பல நாட்கள் கழித்து இறங்கி குத்தப் போகிறார். விக்ரம் முதல் சிங்கிள் இன்று வெளிவரவுள்ளது” என பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் திரைப்படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். அதுவும் பல நாட்கள் கழித்து கமல்ஹாசன் “இறங்கி குத்தியுள்ளார்” என அனிருத் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெறி கொண்டு இருக்கும் ரசிகர்களை இப்போது அனிருத் வெயிட்டிங்கில் வெறியேத்த வைக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் லாஞ்ச்க்கான அறிவிப்பு நேற்று வந்த நிலையில் இன்று சிங்கிள் வெளியாகவுள்ளது, அதுவும் கமல் அப்பாடலை பாடியுள்ளார் என்பது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#PathalaPathala Ulaganayagan @ikamalhaasan sir in yerangi kuthu mode after a long time 🕺💃🕺💃 #VikramFirstSingle from today 🥳🥳🥳@Dir_Lokesh 💥💥💥 @RKFI
— Anirudh Ravichander (@anirudhofficial) May 11, 2022
