Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உலக நாயகனின் உலக வசூல் எவ்வளவு தெரியுமா?

CINEMA

உலக நாயகனின் உலக வசூல் எவ்வளவு தெரியுமா?

“விக்ரம்” திரைப்படம் உலகளவில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?

“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகளவில் வெளியானது. “விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் கேரியரிலேயே மாஸ் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது.

இதனால் கமல் ஹாசனும் படக்குழுவினரும் குஷியாக இருக்கின்றனர். கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார். அதனை தொடர்ந்து உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பரிசாக அளித்தார். அதனை தொடர்ந்து “ரோலக்ஸ்” கதாப்பத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு அன்பு பரிசாக “ரோலக்ஸ்” வாட்ச்சை பரிசாக வழங்கினார்.

“விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் மாஸ் ஹிட் ஆகி உள்ளது. அதாவது இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே வெகு விரைவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் கூட ஒரு தியேட்டர் உரிமையாளர் கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் “பாகுபலி 2” திரைப்படத்தை ஓரங்கட்டி உள்ளது என பதிவிட்டு இருந்தார். அதாவது ஒரு வாரத்திலேயே “பாகுபலி 2” திரைப்படத்தின் ரெகார்டை தகர்த்து கொண்டு “விக்ரம்” திரைப்படம் சென்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “கே. ஜி. எஃப் 2” திரைப்படத்தை போலவே “விக்ரம்” திரைப்படமும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்கமே நிறைந்து வருகிறது. இது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் வேற லெவல் கலெக்சனை அள்ளியுள்ளது. அதாவது ரூ. 300 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top