CINEMA
“நான் டிவில மட்டும் இல்ல, வாட்ச்லயும் வருவேன்”.. கர்ஜிக்கு கமல்
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் உணர்ச்சிவசத்தில் கொந்தளித்து பேசியுள்ளார் கமல் ஹாசன்.
“விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது. பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு மாபெரும் வசூல் செய்த திரைப்படமாகவும் “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி “விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி கலெக்சனை தாண்டி வருகிறது. இதனால் ரசிகர்களும் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல் ஹாசன் இதனால் குஷியில் இருக்கிறார். அவரது கேரியரிலேயே முக்கியமான மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். அதன் பின் இத்திரைப்படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் அப்பாச்சி பைக்குகளை பரிசளித்தார். அதோடு நிற்காமல் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பிய சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சை அன்பு பரிசாக வழங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் “விக்ரம்” திரைப்படம் குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் கமல் ஹாசன் உணர்ச்சிவசத்தோடு கர்ஜிக்கும் குரலில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதாவது “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுத்து வழங்கியபோது கமல் அவ்வளவுதான் என சொன்னார்கள், ஆனால் இப்போது பாருங்கள் எனது திரைப்படம் 300 கோடியை தாண்டியுள்ளது” என ஆவேசத்தோடு கூறியுள்ளார்.
மேலும் பேசுகையில் அவர் “மக்களுக்கு செய்தி சொல்ல வேண்டும் என்றால் எந்த மீடியத்தை வேண்டுமானாலும் நான் பயன்படுத்திக் கொள்வேன். டிவி மட்டும் அல்ல நாளை வாட்ச்சிலும் வரமுடிந்தால் கூட அதில் வந்து மக்களுக்கு செய்தி சொல்வேன்” எனவும் கர்ஜிக்கும் குரலில் பேசியுள்ளார் கமல் ஹாசன்.
