CINEMA
ரோலக்ஸுக்கே “ரோலக்ஸ்” பரிசளித்த கமல் ஹாசன்…
விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரோலக்ஸுகே “ரோலக்ஸ்” வாட்ச் பரிசாக கொடுத்துள்ளார் கமல் ஹாசன்
“விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நேற்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் லெக்சஸ் தயாரிப்பில் சொகுசு மாடல் கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ் “மிக்க நன்றி ஆண்டவரே” என குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மேலும் ஆச்சரியத்தக்க விஷயமாக லோகேஷ் கனகராஜ்ஜுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பரிசாக வழங்கினார். கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படம் வெற்றி அடைந்த குஷியில் கர்ணனாக மாறிவிட்டார் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் அடித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது அதிர்ச்சிக்கே அதிர்ச்சியூட்டும் விதமாக ரோலக்ஸுக்கே ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக அளித்துள்ளார். அதாவது “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சூர்யா “இது போன்ற தருணம் தான் வாழ்க்கையை அழகாக்கும். உங்கள் ரோலக்ஸுக்கு நன்றி” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
“விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரம் சிறிது நேரமே இடம் பெற்றிருந்தாலும், Goose bumps –ஐ கிளப்புவது போன்ற கதாப்பாத்திரமாக அமைந்தது. சூர்யா வித்தியாசமாகவும் கண்களில் வெறித்தனமாகவும் அக்காட்சியில் நடித்திருப்பார். அக்காட்சியை பரவலாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் “விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து கமல் ஹாசனுக்கு “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது அவரை மேலும் குஷி படுத்தி உள்ளது. இதனால் பரிசுகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்.
A moment like this makes life beautiful! Thank you Anna for your #Rolex! @ikamalhaasan pic.twitter.com/uAfAM8bVkM
— Suriya Sivakumar (@Suriya_offl) June 8, 2022