Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” திரைப்படத்திற்கு சூர்யா சம்பளம் வாங்கவில்லையா? கமல் Open talk

CINEMA

“விக்ரம்” திரைப்படத்திற்கு சூர்யா சம்பளம் வாங்கவில்லையா? கமல் Open talk

“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொன்ன கமல், சூர்யாவை பற்றி சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. கமல் ஹாசனிற்கு கடந்த 4 வருடங்களாக எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் “விக்ரம்” திரைப்படம் வெளிவந்துள்ளது.

ஆதலால் ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு ஒரு வெற்றித் திரைப்படமாக “விக்ரம்” அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி ஆகிய பலருக்கும் நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன், எடிட்டர் பிளோமின் ராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதன் பின் லோகேஷ் கனகராஜை பாராட்டி சில நிமிடங்கள் பேசினார். மேலும் “தரமான படங்களை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. அந்த வரிசையில் என்னையும் எங்களுடைய “விக்ரம்” திரைப்படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்” என நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவை பற்றி குறிப்பிடும் போது “சூர்யா அன்பினால் மட்டுமே நடித்து கொடுத்தார்” என கூறினார்.

சூர்யா இடம்பெற்ற காட்சி ரசிகர்களை Goose bumps-க்கு உள்ளாக்கியது. இந்நிலையில் கமல் ஹாசன் கூறியதை வைத்து பார்க்கும் போது சூர்யா சம்பளம் வாங்காமல் கமலின் மேல் வைத்திருக்கும் அன்பினால் மட்டுமே நடித்து கொடுத்தார் என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top