CINEMA
இந்த வயசுலயும் நைட்டு 2 மணிக்கு Push up?.. கமல் வேற லெவல்..
இந்த வயதிலும் கமல் ஹாசன் நள்ளிரவு 2 மணிக்கு 26 push up எடுத்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு கலெக்சனை அள்ளிக்கொண்டு வருகிறது. கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்களையும் ஓவர் டேக் செய்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக பல திரையரங்குகளில் இன்றும் “விக்ரம்” திரைப்படம் வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டும் அல்லாது பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு “விக்ரம்” திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
“விக்ரம்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படத்தின் சாதனையை தற்போது “விக்ரம்” திரைப்படம் ஓவர் டேக் செய்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் ஒரு பேட்டியில் “விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சண்டைக் காட்சிக்கு தயாரான போது நள்ளிரவு இரண்டு மணிக்கு கமல் ஹாசன் 26 push up-கள் எடுத்தார் என கூறினார்.
இந்நிலையில் அந்த Push up வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த வயதிலும் கமல் ஹாசன் நள்ளிரவு இரண்டு மணிக்கு 26 push up எடுத்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.